Thursday, February 20, 2014
இலங்கை::இறுதிகட்ட போரின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிகட்ட யுத்தம் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென நவநீதம் பிள்ளை கோரியிருந்தார்.
எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்கப் போவதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் தொடர்பில் நவநீதம்பிள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் பீரிஸ் சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
சர்வதேச சுயாதீன விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனை அரசாங்கம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான ஜெனிவாவின் இலங்கை நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க ஊடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment