Thursday, February 20, 2014
இலங்கை::நேற்று யாழிற்கு வருகை தந்த பிரிட்டன் தூதுக்குழு யாழ். பொது நூலகத்திற்கு விஜயம் செய்துள்ளது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூனின் யாழ். பயணத்தை நினைவுகூரும் வகையில், அவரிடமிருந்து ஒரு தொகுதி நூல்கள் கையளிக்கப்பட்டன.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜான் ரன்கின், பிரித்தானிய அரசியல் குழுக்களின் தலைவர் டானியல் பெயின்டர் ஆகியோர் அடங்கிய இந்த குழுவினர், பொது நூலகத்தின் சிறுவர் பகுதிக்கு ஒரு தொகை நூல்களை அன்பளிப்பாக வழங்கியதோடு, யாழ். பொது நூலகத்தையும் பார்வையிட்டனர்.
No comments:
Post a Comment