Pages

Thursday, February 6, 2014

அமெரிக்க ராஜதந்திரிக்கு வீசா மறுக்கவில்லை: இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது!

Thursday, February 06, 2014
இலங்கை::இலங்கை::அமெரிக்க ராஜதந்திரிக்கு வீசா மறுக்கவில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
அமெரிக்காவின் பெண்கள் தொடர்பிலான விசேட பிரதிநிதி கெதரீன் ரஸல் இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும், வீசா மறுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
 
எனினும், அமெரிக்க ராஜதந்திரிக்கு வீசா மறுக்கப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
 
கெதரீன் ரஸலுக்கு வீசா மறுப்பதற்கு எவ்வித தேவையும் கிடையாது என குறிப்பிட்டுள்ளது.
 
சந்திக்க வேண்டிய சிலரை சந்திக்க முடியாத காரணத்தினால் அவரது பயணத் திகதி திருத்தி அமைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
 
 


 

No comments:

Post a Comment