Pages

Monday, February 10, 2014

மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தின் போது அமெரிக்க ஆதரவை நிராகரித்தமை சிறந்த பலன்: சமரசிங்க!

Monday, February 10, 2014
இலங்கை::மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தின் போது சர்வதேசம் அதில் தலையிடுவதற்கு மேற்கொண்ட முயற்சி தொடர்பில் அமைச்சர்

மாத்தறை கொட்டுவேகொட பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர்.

இலங்கையில் இருந்த சில தூதுவர்கள் பாரிய அழுத்தங்களை பிரயோகித்தனர்.

அப்போதிருந்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜனாதிபதியை சந்தித்து பொதுமக்களை காப்பாற்றுவதற்கு தாம் ஆதரவு வழங்க விருப்பம் வெளியிட்டார்.

அதுகுறித்த கலந்துரையாடலுக்கான அழைப்பும் எனக்கு கிடைத்திருந்;தது.

யுத்தம் நிறைவடைய நான்கு தினங்கள் இருந்தபோதே இந்த விருப்பம் வெளியிடப்பட்டது. அமெரிக்க கப்பல் ஒன்றை அனுப்பி பொதுமக்களை மீட்டு திருகோணமலை கடற்கரையில் விடுவதாக அந்த தூதுவர் தெரிவித்தார்.

ஆனால், ஜனாதிபதி அதற்கு மாற்று கருத்தை வெளியிட்டதுடன், இந்தியா மற்றும் சில நாடுகளிடம் இருந்து இவ்வாறான யோசனை முன்வைக்கப்பட்டதாகவும், அமெரிக்காவின் உதவி பற்றி பின்னர் அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் ஜனாதிபதி தம்மிடம் தனியாக கலந்துரையாடியதாகவும், அமெரிக்காவுக்கு இவ்வாறான வாய்ப்பை வழங்கியிருந்தால் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை உறுப்பினர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். யுத்ததை விரைவில் நிறைவு செய்திருக்க முடியாது.
மஹிந்த சமரசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment