Pages

Monday, February 10, 2014

இலங்கைக்கு எதிராக கறுப்பு ஜுலையே சர்வதேச தலையீடுகளுக்கு பின்னணி!

Monday, February 10, 2014இலங்கை::இலங்கைக்கு எதிராக சர்வதேச தலையீடுகளுக்கு பின்னணியமைத்தது கறுப்பு ஜுலையே என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 
மாகாண சபைத் தேர்தல்களுக்காக ஆளும் கூட்டமைப்பு சார்பாக கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதன் செயலாளர்
சுசில் பிரேமஜயந்த இந்த கருத்தை வெளியிட்டார்.
எதிர்வரும் இரு மாகாண சபைத் தேர்தல்களின் பெறுபேறுகள் உள்ளுர் அரசியலிலும், வெளிநாட்டிலும் முக்கியம் வாய்ந்தாக கருதப்படுகின்றது.
 
இந்த மகிழ்ச்சியும், சுதந்திரமும் கொண்டதாக இருப்பதற்கான முக்கியமான காரணம், கடந்த நான்கு வருட காலப்பகுதியினுள், நாட்டின் சகல பகுதிகளிலும், அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகும்.
 
கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் நாம் எதிர்பார்ப்பது மக்களின் மேம்பாடு மற்றும்  உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை வழங்குவதாகும் என்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இரண்டாவதாக, சுதந்திரமான நாடாக செயற்படும் இலங்கையில் நாம் சுதந்திரமான தீர்மானங்களை எடுக்க மக்களுக்கு உரிமையுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
அந்த உரிமையில் தலையிட எந்த நாட்டிற்கோ அல்லது எந்தவொரு அமைப்பிற்கோ தகுதியில்லை.
எனவே, அதனை வெளிப்படுத்த நாம் இந்த தேர்தலின் பெறுபேறுகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment