Pages

Saturday, February 8, 2014

எல்லை தாண்டும் மீனவர்களை எவரையும் நடுக்கடலில் விசாரணை செய்வதில்லை: கோசல வர்ணகுலசூரிய!

Saturday, February 08, 2014
இலங்கை::இந்தியாவின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டு 24 மணிநேர விசார ணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகளை கடற்படையினர் மறுத்துள்ளனர்.
 
அவ்வாறானதொரு சம்பவம் எதுவும் இடம்பெறவில்லையென்றும் கடற் படையினர் இந்திய மீனவர்கள் எவரை யும் கைதுசெய்து நடுக்கடலில் வைத்து விசாரணைக்கு உட் படுத்தப்படவில் லையென்றும் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தினகரனுக்குத் தெரிவித்தார்.
 
சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கைக்குள் நுழையும் மீனர்களைக் கைதுசெய்து கரைக்கு அழைத்துவந்து மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பதே கடற்படையினரின் பொறுப்பு. நாம் எவரையும் நடுக்கடலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதில்லை யென்றும் அவர் குறிப்பிட்டார்.
 
கச்சத்தீவு கடல்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வர மீனவர்கள் 15 பேர் கடந்த புதன்கிழமை காலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் நடுக்கடலில் விசாரணை நடத்தப்பட்டு 24 மணி நேரத்தின் பின்னர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
காலை 9 மணிக்கு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் பகல் முழுவதும் விவாரிக்கப்பட்டு இரவு 11 மணியளவில் விடுவிக்கப்பட்டதாக அந்த ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
 
எனினும், அவ்வாறான கைது நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லையென்பதை கடற்படைப் பேச்சாளர் உறுதிசெய்துள்ளார்.

No comments:

Post a Comment