Sunday, February 16, 2014

இலங்கைக்கு எதிராக புலிகளுக்கு ஆரவாக களம் இறங்கினார் டெனிஸ் ஹல்லிடே: கனடாவில் பிரச்சாரம்!

Sunday, February 16, 2014
இலங்கை::ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக, ஐ.நா.வின் முன்னாள் உதவிச் செயலரான டெனிஸ் ஜே ஹல்லிடே(Denis J Halliday) கனடாவில் பரப்புரையில் களமிறங்கியுள்ளது குறித்து இலங்கை அரச தரப்பு கவலையடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து இலங்கைக்கு எதிராக கொண்டு வரவுள்ள அனைத்துலக போர்க்குற்ற விசாரணை கோரும் தீர்மானத்துக்கு, கனடாவில் உள்ள புலிகள் சார்பு முக்கியமான கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் பணியில், ஐ.நா.வின் முன்னாள் உதவிச் செயலரான டெனிஸ் ஜே ஹல்லிடே ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவரை, கனேடிய தமிழ் தேசிய பேரவையே இந்தப் பரப்புரை நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளது. ஐ.நா.வின் முன்னாள் உதவிச் செயலர் டெனிஸ் ஜே ஹல்லிடே, அடுத்த இரண்டு வாரங்கள் கனடாவின் முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளார்.

34 ஆண்டுகள் ஐ.நா.வில் பணியாற்றிய ஹல்லிடே, ஈராக் தொடர்பான ஐ.நா.வின் கொள்கை தொடர்பான தீவிர கருத்து வேறுபாடுகளால், 1998ல் ஐ.நா. உதவிச் செயலர் பதவியில் இருந்து விலகினார்.
னடாவில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, அமெரிக்க பிரித்தானிய தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இருந்தபோதிலும், ஏனைய கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் பணியில் இப்போது டெனிஸ் ஜே ஹல்லிடே இறங்கியிருப்பது கொழும்புக்கு பெரும் சங்கடத்தைக் கொடுப்பதாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது..

இன்று நடைபெறும் நீதிக்கான இராப்போசன விருந்தில் [sheraton parkway hotel 600 Hwy 7, Richmond Hill, Ontario L4B 4R8] பங்குபற்றி பொதுமக்களுக்கு இனப்படுகொலை தொடர்பாக ஆதாரங்களுடன் விளக்கவுள்ளார்.
எதிர்வரும் 17ம் திகதி வரை கனடாவில் தங்கியிருக்கும் டெனிஸ் ஹாலிடே கனடியத் தமிழர் தேசிய அவையின் ஏற்ப்பாட்டில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சித் தலைவர்களையும் உயர்மட்ட அதிகாரிகளையும் மற்றும் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

Thank you :Srilankaa.blog.com

No comments:

Post a Comment