Sunday, February 16, 2014
புதுடெல்லி::ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மான
த்தின் மீது இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க உள்ளது. ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு
எதிராக 2 தடவை கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து அந்தத் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் ஜெனிவாவில் ஐ.நா.சபையின் மனித உரிமைக் கவுன்சில் கூட்டம்
மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதில் இலங்கை மீது அமெரிக்கா 3-வது தடவையாக
கண்டனத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து
இங்கிலாந்து இந்தத் தீர்மானத்தை கொண்டு வருகிறது.
இதை தோற்கடிக்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டு வருகிறது. இலங்கை
வெளியுறவு அமைச்சர் பெரீஸ் சீனா உள்ளிட்ட நாடுகளில் ஆதரவு திரட்டி
வருகிறார். கடந்த 2 முறையும் இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.
தற்போது்ம ஆதரித்து வாக்களி்க்க உள்ளது. இதை மூத்த அதிகாரி ஒருவர்
தெரிவி்த்தார்.

No comments:
Post a Comment