Saturday, February 8, 2014

ஸ்டீபன் ஜே ராப் பூசா இராணுவ முகாமுக்குள் நுழைந்து சரணடைந்தவர்களை தேடினார்: ஐலன்ட்!

Saturday, February 08, 2014
இலங்கை::இலங்கைக்கு அண்மையில் பயணம் செய்த  போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் அமெரிக்காவின் சிறப்பு தூதுவரான ஸ்டீபன் ஜே ராப், பூசா  இராணுவ முகாம் ஒன்றுக்குள் திடீரென உள்நுழைந்து சோதனை நடத்தியதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஐலன்ட் பத்த்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை சென்றிருந்த ஸ்டீபன் ராப் தலைமையிலான அமெரிக்க குழுவினர், காலியில் உள்ள பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்தனர்.

இதன்போது, பூசா தடுப்பு முகாமுடன் இணைந்திருந்த இராணுவ முகாம் ஒன்றுக்குள் அவர்கள் திடீரென உள்நுழைந்து தேடுதல் நடத்தும் பாணியில் பார்வையிட்டுள்ளனர்.

வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தில்  படையினரிடம் சரணடைந்த  புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் பலர், இன்னமும் எங்குள்ளனர் என்று தெரியாதுள்ளது.

இவர்கள் இரகசிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், பூசா தடுப்பு முகாமுக்கு அருகில் இருந்த படையினரின் முகாமும், அத்தகைய இரகசியத் தடுப்பு முகாமாக பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே ஸ்டீபன் ராப் குழுவினர் அதற்குள் நுழைந்து பார்வையிட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் பூசா தடுப்பு முகாமுடன் இணைந்த இராணுவ முகாமுக்குள், ஸ்டீபன் ராப் தலைமையிலான குழுவினர் அத்துமீறி நுழைந்ததாக, இலங்கை அரசாங்க வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

அது தடுப்பு முகாமின் பாதுகாப்புக்கான முகாம் என்பதை அமெரிக்க அதிகாரி தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்றும், அமெரிக்காவினது இந்த அணுகுமுறையை இலங்கை அரசாங்கத்தினால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஐலன்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
 

No comments:

Post a Comment