Saturday, February 8, 2014

66வது சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் கீரிமலையில் நடைபெற்றது!

இலங்கையின் 66வது சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் வட மாகாண ஆளுநர் செயலகமும் யாழ் மாவட்ட செயலகமும் இணைந்து கீரிமலையில்  06 பெப்பிரவரி 2014 அன்று முன்னெடுக்கப்பட்டது. வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி பிரதம விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
 
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், சுதந்திர தின உரையில் அதிமேதகு ஜனாதிபதி கேட்டுக் கொண்டது போன்று பெற்றுக் கொண்ட சுதந்திரத்தினையும், சமாதான சூழலினையும் அனைவரும் பேணிப் பாதுகாக்க வேண்டுமென தெரிவித்தார். வலிகாமம் வடக்கு பிரதேசங்களில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு வேண்டிய சகல வசதிகளும் மேற்கொண்ள்ளப்படுமெனவும் ஆளுநர் தெரிவித்தார்.

கீரிமலை பிரதேசத்தில் மீளக்குடியேறிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை ஆளுநர் வழங்கினார். அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

கீரிமலை நகுலேஸ்வர ஆலய சிவாச்சாரியார்கள், ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், யாழ் மாவட்ட அரச அதிபர் திரு. சுந்தரம் அருமைநாயகம், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment