Pages

Monday, February 17, 2014

நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு அருகில் விபத்து – இரு இளைஞர்கள் பலி!

Monday, February 17, 2014
இலங்கை::அம்பாறை, நிந்தவூர் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். அக்கறைப்பற்று- கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு அருகில் டிப்பர் வாகனமும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதன் போது முச்சக்கர வண்டியின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 
அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த முஹம்மட் காலித் இர்ஷான் (வயது 22), முஹம்மட் ரினாஸ் (வயது 22) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். இவ்விபத்து தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment