Pages

Thursday, February 13, 2014

ஐ.நா. உதவிச் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

Thursday, February 13, 2014
இலங்கை::இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளரும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளருமான சூ ஹா ஓ லியாங்  நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்துரையாடினார். 
 
வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள், மாகாணங்களின் மொத்த அபிவிருத்தி செயற்பாடு, கல்வி மற்றும் ஐக்கிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது என்பன தொடர்பில் இரு தரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றன.
 
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷேனுக்கா செனெவிரத்னவும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment