Monday, February 10, 2014

திருகோணமலை தேசிய கல்வியில் கல்லூரி நிறுவ கல்வி அமைச்சர் இணக்கம்!

Monday, February 10, 2014
இலங்கை::திருகோணமலை மாவட்டத்தில் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், மற்றும்; தகவல் தொழிநுட்பம் ஆகிய படங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை மிக நீண்ட காலமாக இருந்து வருகின்றது. இக்குறைபாட்டைப் போக்குவதற்கு திருகோணமலை மாவட்டத்தில் தேசிய கல்வியில் கல்லூரி ஒன்று அமைக்கப்படவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைசக்சர் நஜீப் ஏ மஜீத், கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தவிடம் வேண்டியதற்கமைய, உடனடியாக திருகோணமலையில் கல்வியல் கல்லூரி ஒன்றை அமைக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
 
கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டஙகளைச் சேர்ந்த 121 பாடசாலைகளுக்கு தொழிநுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் தொலைக்காட்சிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை திருகோணமலை விவேகானந்தா கல்லூரியில், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஷhம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, மாகாண கல்வி அமைச்சர் விமல் வீர திசாநாயக்க உட்பட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும் நேற்று கலந்து கொண்டனர்.
 
இதன் பிற்பாடு கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அவர்களை அவர்களது உத்தியோக பூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துறையாடினார்.
 
இதன்போதே தேசிய கல்வியியல் கல்லூரி ஒன்றை அமைக்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டிக் கொண்டதற்கிணங்க தேசிய கல்வியியல் கல்லூரி அமைக்கப்பட வேண்டிய இடத்தையும் கல்வி அமைச்சர் முதலமைச்சருடன் சென்று பார்வையிட்டார்.
 
அத்தோடு முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அவர்களின் அழைப்பை ஏற்று கிண்ணியா மத்திய கல்லூரிக்கு (தேசிய பாடசாலை) விஜயம் செய்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கல்லூரியை முழுமையாக பார்வையிட்டு இக்கல்லூரியில் காணப்படும் அசிரியர் பற்றாக்குறை மற்றும் பௌதீக வளங்களையும் பெற்றுத்தருவதாக முதலமைச்சரிடம் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment