Monday, February 10, 2014
சென்னை::13_ந்தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சட்டசபை கூடும் நேரம் காலை 10 மணிக்கு பதிலாக
11 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் கடந்த மாதம் 30_ந்தேதி தொடங்கியது. கவர்னர் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கியது.
பின்னர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதில் எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களின் கருத்துக்களுக்கு முதல்_அமைச்சர் ஜெயலலிதா கடந்த 3_ந்தேதி பதில் அளித்து பேசினார்.
இந்த ஆண்டின் 2_வது கூட்டத் தொடர் வருகிற 13_ந்தேதி தொடங்குகிறது. அன்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதில் அரசின் புதிய திட்டங்கள் இடம்பெறும். 13_ந்தேதி சட்டசபை காலை 10 மணிக்கு பதிலாக 11 மணிக்கு கூடும் என்று இப்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:_
13.2.2014 (வியாழக்கிழமை) அன்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவை காலை 10 மணிக்கு பதிலாக முற்பகல் 11 மணிக்கு கூடும் என்று பேரவை தலைவர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 26(2)_ன் கீழ் ஆணையிட்டுள்ளார். அவ்வமயம் 2014_2015ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்.
இவ்வாறு சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

_22.jpg)
No comments:
Post a Comment