Pages

Friday, February 7, 2014

யானை பாதிப்புக்கு உள்ளான குடும்பத்துக்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் வீடு!

Friday, February 07, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று சித்தாண்டி பிரதேசத்தில் யானைப்பாதிப்புக்குள்ளான குடும்பம் ஒன்றின் வீடு அமைப்பதற்கான அடிக்கல்நடும் நிகழ:வு இன்றைய தினம் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் இத்திட்ட ஆரம்ப நிகழ்வில், கமநல அபிவிருத்தித்திணைக்கள உதவி ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம், மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் ஊடக இணைப்பாளர் வீ.ஜீவானந்தம், கிராம சேவையாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.ஜெயகாந்தன் எஸ்..பத்மநாதன் மற்றும் எஸ்.ஜீவா உட்பட சித்தாண்டி 3ம் குறிச்சிக்குரிய கிராமசேவகர் எஸ்.சுதாகர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

குறித்த வீடு கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் முழுமையாக அமைத்துக் கொடுக்கப்படும். இந்த புனர்வாழ்வு நிதியத்தின் முக்கிய நோக்கமே மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை முன்னேற்வதாகவே அமைந்திருக்கும் அந்தவகையில் இன்றைய தினம் அடிக்கல் நடப்பட்டதாக உதவி ஆணiயாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கென புனர்வாழ்வு நிதியமொன்றை கமலநல சேவைகள் திணைக்களம்  ஆரம்பிததுள்ளது. இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக காட்டு யானைகளினால் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களின் பிள்ளைகளுக்கான வீட்டுத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து கொடுபதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வியைத் தொடர்வதற்கான சகலவசதிகளையும் செய்து கொடுப்பதற்கு இத்திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன் முதற்கட்ட உதவியாக யானை தாக்கி உயிரிழந்த சித்தாண்டி 3ம் குறிச்சியிலுள்ள வினாசித்தம்பி என்பவரின்  மூன்று பெண் பிள்ளைகள் எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாது இருந்தபோதிலும் நேற்று (06.02.2014)புதிய வீடு கட்டுவதற்கான உதவிகளை திணைக்களம் ஊடாக அதிகாரிகளாகவே முன்வந்து செய்துகொடுத்துள்ளார்கள்.
 

No comments:

Post a Comment