Pages

Saturday, February 8, 2014

ஆசியா மன்றத்தின் ஏற்பாட்டில் உள்ளுராட்சி மன்ற அதிகாரிகளுக்கான செயலமர்வு!

5 (1)
1
3
6 (1)
8 (1)
4
12
11
9
10
7
Saturday, February 08, 2014
இலங்கை::உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையுடனும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் ஆசியா மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளுர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தின் கீழ் உள்ளுராட்சி மன்ற அதிகாரிகளுக்கான ‘அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்’ என்ற தொனிப் பொருளில்
 
மூன்று நாள் வதிவிட செயலமர்வு  (06-02-2014) மட்டக்களப்பு ஈஸ்ட் லகுன் ஹோட்டலில் நடைபெற்றது.
 
இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகான முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கலந்து கொண்டு;; செயலமர்வை ஆரம்பித்து வைத்தார்.
 
இங்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜித், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் டபள்யு.பி.பி.ஜி.விக்கிரமசிங்க, ஆசியா மன்றத்தின் பணிப்பாளர் கோபாகுமார் கே தம்பி, பிதிப் பணிப்பாளர் ஏ.சுபாகரன் ஆகியோர் உரையாற்றினர்.
 
அத்துடன் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் மற்றும் ஆசியா மன்றம் வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வரும் ஐந்து மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட 15 உள்ளுராட்சி மன்றங்களின் அரிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
ஆசியா மன்றத்தின் நிகழ்சித் திட்ட உத்தியோகத்தர்களான எம்.ஐ.எம்.வலீத், றிசாட் சரீப், சசீகரன் ஆகியோர் நிகழ்வை நெறிப்படுத்தனர்.

No comments:

Post a Comment