Pages

Wednesday, February 19, 2014

இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்சினைகளை தீர்க்க வட மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன்!

Wednesday, February 19, 2014
இலங்கை::இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இரு நாட்டு மக்களிடையேயும் நல்லுறவை வலுப்படுத்துவதற்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முதலமைச்சர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டு இந்தியா சென்று பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென சபையின் எதிர்க்கட்சித் தலைவரான கந்தசாமி கமலேந்திரன் தெரிவித்துள்ளார்.
 
வட மாகாண சபையின் ஆறாவது அமர்வு நேற்று நடைபெற்றபோது, மேற்படி பிரேரணையைக் கொண்டு வந்து உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், இந்திய இழுவைப் படகுகளினால் இங்குள்ள மீனவர்கள் பெரும் பாதிப்புக்களை நாளாந்தம் எதிர்நோக்குகின்ற அதே வேளையில், அவர்களுடைய வாழ்வாதாரம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.
 
இந்த விடயம் தொடர்பாக பல நடவடிக்கைகள் எடுப்பதாக பலரும் கூறி வருகின்ற நிலையிலும், இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் இன்றி தொடர்ந்தும் எமது வளம் அழிக்கப்படுவதுடன், தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
 
ஆகவே, இதனைத் தீர்ப்பதற்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கமைய, இரண்டு நாட்டவர்களும் பேச வேண்டும். இதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.
 
இதற்கமைய, சபையில் ஏகமனதாக இப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோன்று மாகாணத்திற்கு அஞ்சல் முத்திரை வெளியிட வேண்டுமென்றும், கொண்டு வரப்பட்ட பிரஷரேரனையும் நிறைவேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது..

No comments:

Post a Comment