Wednesday, February 19, 2014
இலங்கை::ஜெனீவாவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் மாநாட்டிற்காக பங்கேற்கவுள்ள இலங்கைக் குழுவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க உள்ளடக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலக பேச்சாளர் மொஹான் சமரநாயக்க இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த குழுவிற்கு தலைமை தாங்கவுள்ளார்.
ஜெனீவாவில் ஏற்கனவே இலங்கை தொடர்பாக கடந்து இரண்டு வருடங்களாக பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்ட போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினரே உரிய மாற்று நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.
இந்த முறை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவை அமர்வுகள் மார்ச் 3 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதன்போது, மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை தமது அறிக்கையை மார்ச் 26 ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன். அமெரிக்காவும் தமது பிரேரணையை பேரவை அமர்வுகளின் போது தாக்கல் செய்யவுள்ளது.
இதனடிப்படையில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தமுறை மனிதவுரிமைகள் மாநாட்டில் எதிர்வரும் 5 ஆம் திகதி உரையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுள்ளார்.

No comments:
Post a Comment