Pages

Friday, February 7, 2014

இந்தியத் துணைத் தூதர் வெ. மகாலிங்கம் கயானாவின் கூட்டுறவுக் குடியரசுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்!

Friday, February 07, 2014
இலங்கை::யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதர் வெ. மகாலிங்கம் தென் அமெரிக்காவிலுள்ள கயானா கூட்டுறவுக் குடியரசுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாக யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது.
 
கடந்த 2010ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரகம் திறந்து வைக்கப்பட்டது முதல் இன்று வரை துணைத் தூதுவராக மகாலிங்கம் கடமையாற்றி வந்த நிலையிலேயே இங்கிருந்து மாற்றம் பெற்றுச் செல்லவுள்ளார்.
 
யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் நவம்பர் 2010ல் ஆரம்பிக்கப்பட்ட போது முதலாவது துணைத் தூதராக நியமனம் பெற்றது முதல் கடமையாற்றி வருகிறார். இராஜதந்திரத் துறையில் அவருக்கு இருபதுக்கு மேற்பட்ட வருட அனுபவம் உள்ளது.
 
பொறியியலாளரும், அஹமதாபாத்திலுள்ள புகழ்பூத்த முகாமைத்துவத்துக்கான இந்திய நிறுவனத்தின் முகாமைத்துவப் பட்டதாரியுமான இவர் ஜகார்த்தா, கோலாலம்பூர் மற்றும் சக்ரெப் ஆகிய இடங்களிலுள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளதுடன், சென்னை டெல்லி ஆகிய இடங்களில் பிராந்தியக் கடவுச்சீட்டு அதிகாரி உள்ளிட்ட பதவிகளில் வெளிவிவகார அமைச்சில் சேவையாற்றியுள்ளார்.
 
கயானாவில் தனது கடமைகளை வெகு விரைவில் இந்திய உயர்ஸ்தானிகராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், யாழிலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் அடுத்த தூதுவர் தொடர்பில் எந்தவித அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை.
 

No comments:

Post a Comment