Wednesday, February 19, 2014

யாழ்ப்பாணத்தில் மீள் குடியேரிய மக்களுக்கான மருத்துவ முகாம்!

Wednesday, February 19, 2014
இலங்கை::யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கென இராணுவத்தினரால் மருத்துவ முகாம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை     நடாத்தப்பட்டது. மீள்குடியேறிய மக்களின் சிறார்களது பல் மற்றும் ஏனைய சுகாதார சிகிச்சைகளை வழங்கும் பொருட்டு இம்முகாம் ஒழுங்கு செய்யப்பட்டமையானது குறிப்பிடத்தக்கதாகும்.
 
மந்திகை ஆதார வைத்தியசலையின் வைத்தியர்கள் மற்றும் மருத்துவக்குழுக்கள் படையினருடன் இணைந்து மேற்படி முகாமை நடாத்தினர். இச்சிகிச்சை முகாமில் 235 க்கும் மேற்பட்ட சிறார்களும் ஆசிரியர்களும் சிகிச்சைகளைப் பெற்று பயனடைந்தனர்.
 
இதேவேளை வடமேல்மாகாண கட்டளைப்பிரிவுக்குட்பட்ட கடற்படையினரும் சிகிச்சை முகாமொன்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை (பெப்.16) மன்னார் மாவட்டத்தில் நடத்தினர். இச்சிகைச்சை முகாமானது முள்ளிக்குளத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட ரோமன் கத்தோலிக்க ஆலயத்தில் கடற்படையினரால் நடாத்தப்பட்டது.

No comments:

Post a Comment