Tuesday, February 4, 2014

மட்டக்களப்பு மாநகர சபையில் இலங்கைத் திருநாட்டின் 66வது சுதந்திர தின நிகழ்வுகள்!

Tuesday, February 04, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாநகர சபையில் இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பமானது.
முதலில் தேசிய கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு அதன் பின்னர் மரித்த சகலருக்கும் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆணையாளர் தமது வரையில் நாம் இன்று கொண்டாடும் நுதந்திர தின நிகழ்விற்கு எமது முன்னோர்களின் தியாகமும் அர்ப்பணிப்பும் அத்திவாரங்களாக அமைவதுடன் எமது சேவைகளூடாக நாம் பொதுமக்களுக்கு உரிய கேளரவத்தையும் மரியாதையையும் வழங்க முடியும். இது எமது சுதந்திர தின உறுதிப்பாடாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
 
இந்நிகழ்வில் பிரதி ஆணையாளர், கணக்காளர், பொறியியலாளர், கால்நடை வைத்திய அதிகாரி மற்றும் நிருவாக உத்தியோகத்தருடன் மாநகர சபையின் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment