Pages

Friday, February 7, 2014

யாழ். மாவட்டத்தில் ஒருவாரத்தில் 175 பேர் கைது!

Friday, February 07, 2014
இலங்கை::பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 175 பேர் யாழ். மாவட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்தத் தகவலை யாழ். மாவட்ட பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமல சேன தெரிவித்துள்ளார்.
 
மதுபோதை, அடிதடி வன்முறை, சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவித்தமை, சந்தேகத்தின் அடிப்படையில், வாகன விபத்து, திருட்டு, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உட்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் 175 பேரும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
 
யாழ். மாவட்டத்திலுள்ள பிரதான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளான யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளின் கீழேயே இந்தக் கைது சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

No comments:

Post a Comment