Sunday, January 19, 2014

இலங்கை கடற்படையினருக்கு முகாமைத்துவ பயிற்சி வழங்குவது தொடர்பாக கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கும் கடற்படையினருக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Sunday,January,19, 2014
இலங்கை::இலங்கை கடற்படையினருக்கு முகாமைத்துவ பயிற்சி வழங்குவது தொடர்பாக கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கும் இலங்கை கடற்படையினருக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றுகைச்சாத்திடப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சார்பில் பல்கலைக் கழக துணைவேந்தர் கலாநதி கி.கோபிந்தராஜாவும் இலங்கை கடற்படை சார்பில் பயிற்சி பிரிவு பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் எம்.யு.கே.வி.பண்டார ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

கிழக்குப் பல்லைக் கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறூமூலை வளாகத்தல்இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நடைபெற்றது.

முகாமைத்துவம் சம்பந்தமாக கற்கை நெறிக்கு கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர்களை வழங்குதல் மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சிகளை பெற்றுக் கொடுத்தல் போன்ற இருதரப்பினருக்கும் பயன்தரக் கூடிய ஒப்பந்தமாக இது அமையுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலையிலுள்ள கடற்படை தளத்தில் இப்பயிற்சி நெறி நடார்த்தப்படவுள்ளது.

அடுத்த இரண்டு வருடங்களுக்கு செயற்படுத்தத்தக்கதாக இந்த ஒப்பந்தம் கைச்சர்திடப்பட்டுள்ள போதிலும் இருதரப்பு உடன்படிக்கைக்கு அமைவாக நீண்ட கால செயற்பாட்டிற்கும் ஏதுவாக ஏதுவாக அமையும்.

கடற்படையினரின் பதவியுயர்விற்கு துணைபுரியும் இப்பயிற்சி நெறி கடந்த காலங்களில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment