இலங்கை::சர்வதேச நாடுகள் எமது நாட்டுக்கு எதிராக செயற்படும் போது அச்சவால்களுக்கு
முகம் கொடுப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குவோம் . இது ஒவ்வொரு
நாட்டினது எதிர்க்கட்சியினதும் கடப்பாடாகும் என எதிர்க்கட்சியின் பிரதம
கொறடாவும் எம்.பி. யுமான ஜோன் அமரதுங்க தெரிவித்தார் .
அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே கருத்து
முரண்பாடுகள் இருக்கலாம் . ஆனால் , அதற்காக நாட்டை
காட்டிக்கொடுக்கமாட்டோம் என்றும் தெரிவித்தார் . இது தொடர்பாக ஜோன்
அமரதுங்க எம்.பி. மேலும் தெரிவிக்கையில்
நாட்டுக்கு சர்வதேச ரீதியாக எதிர்ப்புக்கள் வரும்போது ஆளும் கட்சி ,
எதிர்க்கட்சி என்ற பேதங்களுக்கு அப்பால் சிந்திக்க வேண்டும் . அதன்போது
நாட்டின் பாதுகாப்பே முதலிடத்தில் இருக்கும் . எனவே , நாட்டுக்காக முழு
ஒத்துழைப்பையும் வழங்குவோம் .
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் பதிலளிக்க வேண்டியது
அரசாங்கத்தின் கடப்பாடாகும் . அதில் தலையிடுவதற்கு எமக்கு அதிகாரம் இல்லை .
யுத்த வெற்றியை நாம் ஒரு போதும் எதிர்த்ததில்லை . பயங்கரவாதத்தை ஒழித்ததை வரவேற்கின்றோம் .
மேற்குலக நாடுகளின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் அச்சமின்றி முகம் கொடுப்பது வரவேற்புக்குரியதாகும் .
No comments:
Post a Comment