Monday, January 20, 2014

அர­சுடன் கருத்து முரண்­பா­டுகள் இருக்­கலாம். அதற்­காக நாட்டை காட்­டிக்­கொ­டுக்­க­மாட்டோம். ஜோன் அம­ர­துங்க!

sss2025Monday,January, 20, 2014
இலங்கை::சர்வதேச நாடுகள் எமது நாட்டுக்கு எதிராக செயற்படும் போது அச்சவால்களுக்கு
முகம் கொடுப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குவோம் . இது ஒவ்வொரு நாட்டினது எதிர்க்கட்சியினதும் கடப்பாடாகும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம்.பி. யுமான ஜோன் அமரதுங்க தெரிவித்தார் .
 
அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் இருக்கலாம் . ஆனால் , அதற்காக நாட்டை காட்டிக்கொடுக்கமாட்டோம் என்றும் தெரிவித்தார் . இது தொடர்பாக ஜோன் அமரதுங்க எம்.பி. மேலும் தெரிவிக்கையில்
 
நாட்டுக்கு சர்வதேச ரீதியாக எதிர்ப்புக்கள் வரும்போது ஆளும் கட்சி , எதிர்க்கட்சி என்ற பேதங்களுக்கு அப்பால் சிந்திக்க வேண்டும் . அதன்போது நாட்டின் பாதுகாப்பே முதலிடத்தில் இருக்கும் . எனவே , நாட்டுக்காக முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் .
 
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் பதிலளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும் . அதில் தலையிடுவதற்கு எமக்கு அதிகாரம் இல்லை .
 
யுத்த வெற்றியை நாம் ஒரு போதும் எதிர்த்ததில்லை . பயங்கரவாதத்தை ஒழித்ததை வரவேற்கின்றோம் .
 
மேற்குலக நாடுகளின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் அச்சமின்றி முகம் கொடுப்பது வரவேற்புக்குரியதாகும் .

No comments:

Post a Comment