Thursday, January 16, 2014
இலங்கை::உள்ளூராட்சி மன்றங்களின் வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் அவற்றின் தலைவர்கள் தொடர்ந்தும் பதவியில் இருக்கும் வகையிலான சட்டத் திருத்த வரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இலங்கை::உள்ளூராட்சி மன்றங்களின் வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் அவற்றின் தலைவர்கள் தொடர்ந்தும் பதவியில் இருக்கும் வகையிலான சட்டத் திருத்த வரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தார்.
இம்முறை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 15 உள்ளூராட்சி மன்றங்களின் படஜெட் தோற்கடிக்கப் பட்டதால் அவற்றின் தலைவர்கள் பதவி விலக நேரிட்டதைத் தொடர்ந்தே அரசாங்கம் இந்த சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
இரண்டு தடவைகள் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படின் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் பதவிவிலக வேண்டுமென 2013 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்த திருத்த பிரேரனையில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் நோக்கம் உள்ளூராட்சி மன்ற தலைவர்களின் எதேச்சதிகார போக்கை கட்டுப்படுத்துவதாகவே இருந்தது. ஆயினும், சுயநல நோக்கில் உள்ளூராட்சி தலைவர்களை பதவி விலக்குவதற்காக உறுப்பினர்களால் வரவு-செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்படுவதை நிறுத்தவே இந்த சட்டத் திருத்தம் அவசியமாகின்றது என அமைச்சர் அதாவுல்லா குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment