Thursday, January 16, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக இயற்கை வரலாறு விஞ்ஞான அருங்காட்சியம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இயற்கையின் கோட்டையாக இருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரிய வகையிலான இயற்கை பொருட்களைக்கொண்டு இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்;டுள்ளது.
புhடசாலை மாணவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவுள்ள இந்த அருங்காட்சியகத்தை கண்டுகளிக்க அனைவரையும் அழைக்கப்பட்டுள்ளது.
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக இயற்கை வரலாறு விஞ்ஞான அருங்காட்சியம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பொது நூலகத்தில் நேற்று புதன்கிழமை காலை இந்த அருங்காட்சியம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இயற்கையின் கோட்டையாக இருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரிய வகையிலான இயற்கை பொருட்களைக்கொண்டு இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்;டுள்ளது.
இந்நிகழ்வு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் அறிவையும் மற்றும் செயல்முறைகளையும் எமது துறைசார் கல்வியியலாளர்கள் பெறும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள “விஞ்ஞான மாலுமிகள்” அமைப்பின் தலைவரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிட்சை நிபுணருமான . கே. அருள்நிதி தலைமையில் இடம்பெற்றது.
இந்த அருங்காட்சியம் மாணவர்களுக்கும்,இயற்கை விஞ்ஞான ரீதியான தேடல்களைக்கொண்டவர்களுக்கும் இந்த கூடம் பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த அருங்காட்சியகத்தினை திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சத்தியநாதன்,முன்னாள் மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இயற்கை வனப்புக்கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை விஞ்ஞான துறையில் ஆய்வுகளை மேற்கொள்ளுவோருக்கும் புதிய விஞ்ஞானிகளை உருவாக்குவதிலும் பெரும் பங்கை ஆற்றக்கூடியதாக இந்த இயற்கை வரலாறு விஞ்ஞான அருங்காட்சியம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment