இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் தமிழகத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பில் வட மாகாணசபைத் தேர்தல்களின் பின்னரான நிலைமைகள் குறித்து
பேசப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜீ.ராமகிருஸ்ணன் உள்ளிட்ட பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜீ.ராமகிருஸ்ணன் உள்ளிட்ட பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இலங்கை அரசியமைப்பிலிருந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யும்
இலங்கை அரசின் முயற்சிகளை இந்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்தியதாக
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்ததார். என
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு
உறுப்பினர் ஏ ஆறுமுகநயினார் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கு மாகாணசபைத்
தேர்தலுக்குப் பின்னரான நிலைமையில், தமிழ் மக்கள் சந்திக்கும் பல்வேறு
பிரச்சனைகள் குறித்து இதன்போது பேசப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு விடுத்துள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரின் பிரச்சனைக்கான
தீர்வுத்திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகள்
பற்றியும் சம்பந்தன் விளக்கமளித்ததாக அந்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:
Post a Comment