Monday, January 13, 2014
இலங்கை::யாழ் மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதியாக மேஜர் ஜெனரல் உதயபெரேரா நேற்று தனது கடமைகளை உத்தியோக பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
10ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ் பலாலி உள்ள பாதுகாப்பு படைகளின் தலைமையத்தில் தனது பொறுப்புக்களைப் ஏற்றுக்கொண்டார்.
2009 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க இராணுவத்தலைமையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதையடுத்து 2009 ஆம் தொடக்கம் கிளிநொச்சி இராணுவத்தளபதியாக இவர் யாழ் மாவட்ட இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இராணுவத்தளபதியாக தனது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட பின்னர் அன்று மாலை வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த மல்லாகம் கோணப்புலம் நலம்புரி நிலையத்திற்குச் சென்று 100 பாடசாலை மாணவர்களுக்கு 500 ரூபா வைப்பிலிப்பட்ட வைப்புப் புத்தகத்தை வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வுகளில் படைப்பிரிவின் கட்டளைத்தளபதிகள், இராணுவ வீரர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.











No comments:
Post a Comment