Pages

Sunday, January 12, 2014

வெளிநாடுகளில் வாழ்கின்ற பல்வேறு சக்திகள் சமுதாயங்களை வேறுபடுத்தி பிரச்சினைகளை உண்டாக்குகின்றன: பிரதமர் டி.எம்.ஜயரட்ண !

Sunday, January 12, 2014
இலங்கை::நாட்டு மக்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி, சமுதாயங்களை வேறுபடுத்தி, பிரச்சினைகளை உண்டுபண்ணி தமது பலத்தினை இங்கே பிரயோகிப்பதற்காக, வெளிநாடுகளில் வாழ்கின்ற பல்வேறு சக்திகள் முயன்று கொண்டிருப்பதை நாம் அறிகிறோம் என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்துள்ளார்.
 
பொங்கல் வெளியீட்டு விழாவை முன்னிட்டு, இந்து கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெற்ற தபால்தலை வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு உரை நிகழ்த்தும் போது, தங்களுடைய சுயலாப நோக்கத்துக்காக மக்களிடையே குரோதங்களை விதைத்து, மக்களைத் தூண்டி மக்களை தம்பக்கம் இழுத்துக்கொண்டு தங்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு இங்கு பலர் இருப்பதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்.
 
சுயலாபம் தேடும் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் மக்களுடைய முன்னேற்றத்தைப் பற்றி சிந்திப்பதென்பது மிக அரிதானதாகவே அமைந்து வருகிறது. நாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் ஒரே இனமாக எல்லோரும் இலங்கையர்களாக வாழவேண்டும் எனக் கோருகிறேன். எமது நாடு மிகவும் சிறிய நாடு. நாட்டில் ஐந்து இனங்கள் வாழ்கின்ற நிலைமை காணப்படுகிறது.
 
இலங்கையில் மூன்று பில்லியன் தமிழ் மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில், 35 கோடியே 80 இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வேறொரு தனிநாடு கோருவதாக தெரியவில்லை. இந்த சிறிய நாட்டில் பிரிவினைவாத்தினைக் கோரினால், இங்குள்ளவர்களின் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment