Saturday, January 4, 2014

கச்சத்தீவு பிரச்சினை தீர்ந்தால் தான் தமிழக மீனவர் பிரச்சினை தீரும் என்பது தவறான கண்ணோட்டம்: ஞானதேசிகன்!

Saturday, January 4, 2014
சென்னை::கச்சத்தீவு பிரச்சினை தீர்ந்தால் தான் தமிழக மீனவர் பிரச்சினை தீரும் என்பது தவறான கண்ணோட்டம் என்று ஞானதேசிகன் கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் பிரதமராக போவதில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் தெளிவுபடுத்தியிருக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென்று அனைவரும் விரும்புகிறோம்.

தமிழக மீனவர் பிரச்சினையில் இருநாட்டு மீனவர்களும் பேசவேண்டும். அப்படி பேசினால் தான் நிரந்தர தீர்வு ஏற்படும். 20-ந் தேதி பேச்சுவார்த்தை இருக்கலாம் என்ற அறிவிப்பு வந்திருக்கிறது. மீனவர் பிரச்சினைக்கு கச்சத்தீவு தான் தீர்வு என்று நான் கருதவில்லை. கச்சத்தீவு பிரச்சினை தீர்ந்தால் தான் மீனவர் பிரச்சினை தீரும் என்பது தவறான கண்ணோட்டம்.

மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரை 9-லிருந்து 12 ஆக உயர்த்த பரிசீலனை செய்வதாக மத்திய அரசு கூறியிருக்கிறது. அவ்வாறு உயர்த்தப்பட்டால் மக்கள் பாதிக்கமாட்டார்கள். மானியம் இல்லாத சமையல் எரிவாயு விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தினால் அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயகாந்துடன் மத்திய-மந்திரி ஜி.கே.வாசன் சந்தித்தபோது என்ன பேசினார்கள் என்பது எனக்கு தெரியாது.

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பிரசாந்த் பூஷன், உதயகுமாருக்கு அழைப்பு விடுத்துள்ளதில் இருந்து அந்த கட்சி எப்படி இருக்கும் என்று யூகிக்க முடிகிறது. வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றதாக குற்றம்சாட்டிய அவர் மீது வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையில் அவரை தலைமை பொறுப்பை ஏற்க அழைக்கும் அந்த கட்சி ஆட்களை தேடிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

tamil matrimony_INNER_468x60.gif
 

No comments:

Post a Comment