Pages

Wednesday, January 22, 2014

ஐக்­கிய தேசிய கட்­சியின் மாத்­தறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீ­ர­வுக்கு எதி­ராக பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்பாடு!

Wednesday, January 22, 2014
இலங்கை::ஐக்­கிய தேசிய கட்­சியின் மாத்­தறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீ­ர­வுக்கு எதி­ராக பொலிஸ் தலை­மை­ய­கத்தில் நப­ரொ­ரு­வரால் முறைப்­பா­டொன்று அளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அதனை விசா­ரணை செய்து அறிக்கை சமர்­ப்பிக்கும் பொறுப்பு மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பன சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனா நாயக்­க­வுக்கு அளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹன தெரி­வித்தார்.

வீர­பெ­ரு­ம­லாகே ஷிவான் பிரி­யங்­கர எனும் நபர் நேற்று முந்­தினம் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் செய்த முறைப்­பாட்­டுக்­க­மை­யவே அதனை விசா­ரணை செய்து அறிக்கை சமர்­பிக்கும் பொறுப்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனா நாயக்­க­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் மேலும் குறிப்­பிட்டார்.

குறித்த முறைப்­பாட்டில் தான் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீ­ர­வுக்கு சொந்­த­மான பொருட்­களை திரு­டிய குற்­ரச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அந்த குற்­றச்­சாட்டு பொய்­யா­னது எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டிய பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் திரு­டப்­பட்­ட­தாக கூறப்­பட்ட மடிக்­க­ணினி மற்றும் விஸ்கி போத்­தல்கள் என்­பன மங்­கள சம­ர­வீர எம்.பி.யினா­லேயே தனக்கு வழங்­கப்­பட்­ட­தாக முறைப்­பாட்­டாளர் தெரி­வித்­துள்­ள­தாக குறிப்­பிட்டார்.

அத்­துடன் வீட்டு வேலைக்­காரர் ஊடாக முறைப்­பாட்டை செய்­வித்து தன்­னையும் தனது குடும்ப வாழ்­வையும் சீர­ழித்த மங்­கள சம­ர­வீ­ர­வுக்கு எதி­ராக சட்­டத்தை அமுல் செய்யுமாறு அந்த முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment