Thursday, January 16, 2014

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு அமெரிக்காவிடம் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கோரிக்கை!

Thursday, January 16, 2014  
இலங்கை::யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு அமெரிக்காவிடம் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவின் யுத்தக் குற்றச் செயல் பிரதிநிதி ஸ்டீவன் n;ரப்பினால் திரட்டப்பட்ட தகவல்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்பதில் அமெரிக்கா மெய்யாகவே கரிசனை கொண்டிருந்தால், திரட்டப்பட்ட ஆதாரங்களை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

சகலவிதமான ஆதாரங்களையும் உறுதி;ப்படுத்திக் கொள்ளும் அரசாங்கத்தின் உரிமையை அமெரிக்கா முடக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரச படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் இலங்கை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய விசேட குழுவும் ஆதாரங்களை சமர்ப்பிக்க முன்வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆதாரங்கள் 2031ம் திகதி வரையில் வெளியிடப்பட் மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் சுமத்துவோரை அடையாளம் காணாது எந்தவொரு அரசாங்கமும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருவதாக கோதபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment