Pages

Tuesday, January 14, 2014

கச்சத்தீவை விட்டுக்கொடுப்பதா? மத்திய அமைச்சர் வாசன் ஆவேசம்!

Tuesday, January 14, 2014
சென்னை::தண்டையார்பேட்டை, துறைமுக குடியிருப்பில், முன்னாள் துணை பிரதமர், பாபு ஜெகஜீவன் ராம் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவிலும், அதன்பின், நிருபர்களுக்கு பேட்டி அளித்த போதும், மத்திய கப்பல் துறை அமைச்சர், வாசன் கூறியதாவது: தமிழகத்தை, மாற்றான் தாய் மனப்பான்மையுடன், மத்திய அரசு பார்ப்பதாக, சிலர் கூறுகின்றனர்; அது தவறாகும். மத்திய அரசு, அனைத்து மாநிலங்களையும், ஒரே மனப்பான்மையுடனே பார்க்கிறது. 

 தமிழக வளர்ச்சிக்கு, மத்திய அரசு, பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. குறிப்பாக, சென்னைக்கு, ஜவகர்லால் நேரு நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், 45 ஆயிரம் கோடி ரூபாயும், குடிநீருக்காக, 1,321 கோடி, பாதாள சாக்கடைக்கு, 2,300 கோடி, திடக்கழிவு மேலாண்மைக்கு, 845 கோடி, மழைநீர் வடிகால்வாய்க்கு, 1,424 கோடி, போக்குவரத்து மேம்பாட்டுக்கு, 17,000 கோடி, எம்.ஆர்.டி.எஸ்., விரிவாக்கத்திற்கு, 600 கோடி, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, 3,000 கோடி மற்றும் துணை நகரத்துக்கு, 5,000 கோடி ரூபாயையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

மீனவர் பிரச்னை தொடர்பாக, இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையே நடக்கும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு முன், "இந்திய சிறைகளில் உள்ள, இலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டும்' என, இலங்கை அமைச்சர் கூறியிருப்பது சுமூக பேச்சுவார்த்தைக்கு உகந்ததல்ல. அதே போல், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும், மீனவ பிரதிநிதிகளும், மீனவர் பிரச்னை தொடர்பாக அறிக்கை விடுவதும், இருநாட்டு இடையேயான பேச்சுவார்த்தையை பாதிக்கும். கச்சத்தீவை விட்டு கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு வாசன் கூறினார்.

No comments:

Post a Comment