Pages

Saturday, January 18, 2014

யாழ். மாவட்­டத்தில் உயர் பாது­காப்பு வலயம் என்ற ஒரு இடம் இல்லை: யாழ் இளைஞர் யுவதிகள் படையில் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா!

Saturday, January 18, 2014
இலங்கை::யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ள புதிதாகப் பதவியேற்றுள்ள மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா இங்கு படை முகாம்களே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தின் புதிய இராணுவத் தளபதியாக கடந்த வாரம் பதவியேற்ற உதய பெரேரா, வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு வெற்றிலைக் கேணி உணவத்தை கண்ணகை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு ஊடகங்களைச் சந்தித்த மாவட்ட இராணுவத் தளபதி ஊடகவியியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதாவது, மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலிலும் அமைக்கப்பட்டிருந்த மினி முகாம்கள் தற்போது அகற்றப்பட்டு வருகின்றன. இதேபோன்று உயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்தும் முகாம்கள் அகற்றப்பட்டு பொதுமக்கள் மீளக் குடியமர்த்தப்படுவார்களா என்று இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

மாவட்ட இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், இங்கிருந்த மினி முகாம்களை அகற்றி வருகின்றோம். மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் முகாம்கள் அகற்றப்படுவதால், இதுவரையில் எத்தனை முகாம்கள் அகற்றப்பட்டுள்ளது என்று தெரியாது.

இதேவேளை, இந்த மாவட்டத்தின் பாதுகாப்புக்குத் தேவையான முகாம்கள் அகற்றப்படாது. மாறாக தற்போது தேவையற்றிருக்கின்ற முகாம்களே அகற்றப்பட்டு வருகின்றது. இதேபோன்று தொடர்ந்தும் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக, மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயமென்ற ஒன்றும் இங்கு இல்லை. இருந்தும் மாட்டத்தின் பாதுகாப்புக்களுக்காகவே இராணுவத்தினர் இங்கு நிலை கொண்டிருக்கின்றனர். ஆயினும், தற்போது இங்கு மினி முகாம்கள் அகற்றப்படுவது போன்று ஏனைய முகாம்களும் அகற்றப்பட்டு படிப்படியாக மக்கள் குடியமர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.
 இதே­வேளைஇ யாழ் மாவட்ட இளைஞர் யுவ­தி­க­ளையும் விரைவில் இரா­ணு­வத்தில் இணைத்துக் கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்­டத்­தி­னு­டைய பாது­காப்­பிற்­கா­கவே இங்கு இரா­ணுவ முகாம்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இதில் மக்­க­ளு­டைய பாது­காப்­பினைக் கருத்தில் கொண்டு இரா­ணு­வத்­தினர் விசேட செயற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இருந்தாலும் நாம் மக்களுடைய காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்' எனத் தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment