Pages

Friday, January 17, 2014

அனந்தி குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றது: பாதுகாப்பு அமைச்சு தகவல்!

Friday, January 17, 2014
இலங்கை::புலிகளின் போரிடும் அணிகளிடம் இருந்து வெளிப்படையாக விலகியே இருந்தாலும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறித்து விசாரணைகள் நடத்தப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், போர்க்காலத்தில் மட்டுமன்றி, போருக்குப் பிந்திய காலக்கட்டத்தில் அவரது பங்கு தொடர்பாகவும் தற்போதைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக ஏதாவது குறிப்பிடத்தக்க தகவலின் அடிப்படையில் அனந்தி சசிதரன் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, அவரது கணவன் திருகோணமலை மாவட்ட அரசியல் தலைவராக இருந்தார் என்ற அடிப்படையிலேயே விசாரணை முன்னெடுக்கப்படுவதாக, பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
 
நார்வேயின் ஏற்பாட்டில் போர் நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டபோது வடக்கு கிழக்கில், அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊடுருவலை மேற்கொள்வதற்காகவே,  புலிகள் அரசியல் பிரிவை உருவாக்கியதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
 
வட மாகாண சபையின் உறுப்பினர் ஆனந்த சசிதரன் ஓர் புனிதரல்ல என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.  புலிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவில்லை என ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எனினும், ஆனந்த சசிதரனுக்கும் புலிகளுக்கும் இடையிலான கடந்தகால உறவு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

யுத்த காலத்திலும் அதன் பின்னரும் ஆனந்தி சசிதரனின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். ஆனந்தி சசிதரனுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென்ற பாதுகாப்பு அமைச்சின் நிலைப்பாட்டுக்கு எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக ஆனந்தியின் கணவர் எழிலன் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை ஊடறுக்கும் நோக்கில் புலிகள் அரசியல் துறையை உருவாக்கியிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஆனந்தி சசிதரனுக்கும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் அடிப்படையிலேயே தாக்கப்பட்டதாகவும், அரசியல் போர்வையில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட அனுமதியளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment