Pages

Friday, January 17, 2014

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக ஷெனூகா செனேவிரட்ன!

Friday, January 17, 2014
இலங்கை::வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக ஷெனூகா செனேவிரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

அதன் செயலாளராக இருந்த கருணாதிலக அமுனுமக ஓய்வு பெற்றதன் பின்னர், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஷெனூகா செனேவிரட்ன இதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றிவந்தார்.

அதற்கு முன்னர் அவர் பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்துக்கான உயர்ஸ்தானிகராகவும், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதியாகவும் செயற்பட்டுள்ளார்.

அத்துடன் நிவ்யோர்க் மற்றும் பிரஸல்ஸ் போன்றவற்றின் உதவி தூதுவராகவும் செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment