Pages

Wednesday, January 22, 2014

மன்னார் மனித புதைகுழிக்கும் படையினருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது: தயா ரட்நாயக்க!

Wednesday, January 22, 2014
இலங்கை::மன்னார் மனித புதைகுழிக்கும் படையினருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். மன்னாரில் 36க்கும் மேற்பட்டவர்களின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்ட பிரதேசம்  புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மன்னார் நீதவானின் முன்னிலையில் குறித்த புதைகுழி தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment