Pages

Wednesday, January 22, 2014

பாகிஸ்தான் பஸ் குண்டுவெடிப்பில் ஷியா பிரிவு யாத்ரீகர்கள் 22 பேர் பலி!

Wednesday, January 22, 2014
பலூசிஸ்தான்::பாகிஸ்தானின் வடக்கு பகுதியான பலூசிஸ்தான் மாகாணம் தீவிரவாதிகள் அதிகம் நடமாட்டமுள்ள பகுதியாகும். இப்பகுதி மாஸ்டுங் மாவட்ட ஷியா பிரிவு யாத்ரீகர்கள் ஈரான் நாட்டிலுள்ள ஷியா முஸ்லிம்களின் புனித தலங்களுக்கு சென்று இன்று மாலை வாகனங்களில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் வருவதை அறிந்த தீவிரவாதிகள், சாலைகளில் புதைத்துவைக்கப்பட்டிருந்த குண்டுகளை அப்போது வெடிக்கச்செய்தனர். இதில் சிக்கிய ஒரு பேருந்து வெடித்து சிதறியது. அப்போது பேருந்தில் இருந்த யாத்ரீகர்களில்  குறைந்தது 22 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது. இப்பகுதிகளில் உள்ள சன்னி போராளிகள் இங்குள்ள ஷியா பிரிவு மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் இயங்கும் லஷ்கர் இ ஜாங்பி என்ற சன்னி போராளிகள் இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு அதிபர் மாம்னூன் ஹூசைன் மற்றும் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 

No comments:

Post a Comment