Pages

Saturday, January 18, 2014

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம்!

Saturday, January 18, 2014
இலங்கை::நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டதற்கு அமைவாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை இன்று முதல் வடக்கில் ஆரம்பித்துள்ளது.
 
இதற்கமைவாக, கிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரம், அக்கராயன் குளம், கண்ணகைபுரம் ஆகிய மூன்று பிரதேசங்களிலும் காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகள் ஸ்கந்தபுரம் அ.தக. பாடசாலையில் இன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற்றது.
 
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குவின் தலைவர் மேக்ஸ்வெல் பரக்ரம பரங்கம (Maxwell parakrama parangama), ஆணைக்குழவின் ஆணையாளர்களான சுரண்யனா வித்யவத்னே, மனோ ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணைகள் நடைபெற்றது.
 
இந்த விசாரணைக்கு மேற்படி பிரதேசங்களான ஸ்கந்தபுரம், அக்கராயன் குளம், கண்ணகைபுரம் ஆகிய மூன்று கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த 35 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இந்த விசாரணைக்கு அழைக்கப்பட்ட இந்த 35 பேரை விடவும் மேலதிகமானவர்கள் வருகை தந்ததனால் திருப்பி அனுப்பட்டனர்.

No comments:

Post a Comment