Pages

Sunday, January 19, 2014

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை எதிர்நோக்கத் தயார்: அமைச்சர் மஹிந்த சமரசிங்க!

Sunday,January,19, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை எதிர்நோக்கத் தயார் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அதனை எதிர்நோக்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் பாரிய சாவல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். படையினருக்கோ நாட்டுக்கோ துரோகம் இழைக்கத் தயாரில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது படையினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

புலிகள் என்ன செய்தார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.300,000 அப்பாவி பொதுமக்களை புலிகள் மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.பொதுமக்களின் மத்தியிலிருந்து படையினர் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

பரஸ்பர துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் போது பொதுமக்கள் உயிரிழந்தமை உண்மை என அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இராணுவத்தினர் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கவே முயற்சித்தனர் எனவும், 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர் ஒருவர் எழுதிய நூலை விற்பனை செய்வதற்காக 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பிழையான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment