Friday, January 17, 2014
சென்னை::பிரதமருக்கு 33 கடிதங்கள் எழுதிய முதல்வர் ஜெயலலிதாவின் இடைவிடாத முயற்சியின் பலனாக தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் பல முறை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள தகவல் கிடைத்ததும், அதுதொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதுவார்.
அதில், தூதரக உறவுகள் மூலம் நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களை விடுதலை செய்யும்படி பிரதமரிடம் கேட்டுக் கொள்வார். முதல்வரின் இந்த சீரிய நடவடிக்கையினால், இலங்கை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் பல முறை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, இதுவரை 33 கடிதங்களை தனது இந்த ஆட்சிக்காலத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது கடுமையான முயற்சியின் விளைவாக தற்போது, இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களும் நேற்றுமுதல் அடுத்தடுத்த நாட்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
_1.jpg)
No comments:
Post a Comment