Monday, January 06, 2014
இலங்கை::இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரது காவலை
ஜனவரி 6 வரை நீட்டித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம்
மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 2-ஆம் தேதியன்று
தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால்
சிறை பிடிக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 15 மீனவர்கள்,
குத்தளம் மாவட்டத்தின் கல்பட்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதி, மீனவர்கள் 15 பேரையும் ஜனவரி 6 வரை காவலில் வைக்க
உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் அனைவரும் நீர்கொழும்பு சிறையில்
அடைக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment