Monday, December 16, 2013
1987ம் ஆண்டு மாகாணசபை சட்டத்தின் 42ம் சட்டத்தின் பிரகாரம் சிவில் பணியாளர்கள் ஆளுனரின் கீழ் நிர்வாகம் செய்யப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும் ஆளுனருடன் கலந்தாலோசித்து முதலமைச்சர் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆளுனருடன் இணைந்து செயற்படுவதன் மூலம் முதலமைச்சர் தனது இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வட மாகாண முதலமைச்சரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்வழிப் பாதையில் பயணிப்பதாகவும் புலம்பெயர் தமிழர்களின் ஆலோசனைக்கு அமைய ஆளுனர் மற்றும் கொழும்புடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கலாநிதி கே விக்னேஸ்வரன் முன்னாள் வடகிழக்கின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளோடு கடமையாற்றி பின் ஈபீடீபீயில் இணைந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராகவும், ஆலோசகராகவும், மிகவும் நெருக்கமானவராகவும் விளங்கியவர். பின்னர் அரசியல் முரண்பாடு, கருத்து முரண்பாடு எனக் கூறி அவருடன் உறவை முறித்து ( அமைச்சருடனான உறவு முறிவதற்கு தனிப்பட்ட முரண்பாடுகளே காரணம் என முன்னர் பேசப்பட்டது) பின் கிழக்கில் மாகாண சபை ஏற்படுத்தப்பட்ட போது பிள்ளையானின் ஆலோசகராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை::வட மகாhண ஆளுனருக்கும் முதலமைச்சருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட வேண்டுமென இலங்கையின் இரண்டு தமிழ் முதலமைச்சர்களுக்கு ஆலோசகராக கடமையாற்றிய கலாநிதி கே. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஆகியோருக்கு ஆலோசகராக விக்னேஸ்வரன் கடமையாற்றியிருந்தார்.
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் முரண்பாடுகளை களைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
முரண்பாடுகள் நீடித்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை அரசாங்கம் கவிழ்ந்து விடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வரதராஜபெருமாளுடன் கடமையாற்றிய காலத்தில் மாகாண ஆளுனர் நலின் செனவிரட்னவுடனும், பிள்ளையானுடன் கடமையாற்றிய காலத்தில் வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவுடனும் பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசித்து இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
1987ம் ஆண்டு மாகாணசபை சட்டத்தின் 42ம் சட்டத்தின் பிரகாரம் சிவில் பணியாளர்கள் ஆளுனரின் கீழ் நிர்வாகம் செய்யப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும் ஆளுனருடன் கலந்தாலோசித்து முதலமைச்சர் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆளுனருடன் இணைந்து செயற்படுவதன் மூலம் முதலமைச்சர் தனது இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வட மாகாண முதலமைச்சரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்வழிப் பாதையில் பயணிப்பதாகவும் புலம்பெயர் தமிழர்களின் ஆலோசனைக்கு அமைய ஆளுனர் மற்றும் கொழும்புடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கலாநிதி கே விக்னேஸ்வரன் முன்னாள் வடகிழக்கின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளோடு கடமையாற்றி பின் ஈபீடீபீயில் இணைந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராகவும், ஆலோசகராகவும், மிகவும் நெருக்கமானவராகவும் விளங்கியவர். பின்னர் அரசியல் முரண்பாடு, கருத்து முரண்பாடு எனக் கூறி அவருடன் உறவை முறித்து ( அமைச்சருடனான உறவு முறிவதற்கு தனிப்பட்ட முரண்பாடுகளே காரணம் என முன்னர் பேசப்பட்டது) பின் கிழக்கில் மாகாண சபை ஏற்படுத்தப்பட்ட போது பிள்ளையானின் ஆலோசகராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment