Monday, December 16, 2013

இலங்கை மீதான யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டு குறித்து கருத்து வெளியிட முடியாது: ஜப்பான்!

Monday, December 16, 2013
இலங்கை::இலங்கை மீதான யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டு குறித்து கருத்து வெளியிட முடியாது என ஜப்பான் அறிவித்துள்ளது.
 
 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் பிரித்தானியா தீர்மானம் நிறைவேற்ற முயற்சிக்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
 
தீர்மானம் நிறைவேற்ற முயற்சிக்கப்பட்டால் அந்த நேரத்தில் ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை விவகாரம் குறித்து பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அக்காஸி தெரிவித்திருந்தார்.
 
ஏற்படக் கூடிய நெருக்கடியான நிலைமைகளிலிருந்து மீள்வதற்கு இலங்கை உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
நெருக்கடி நிலைமைகளின் போது இலங்கைக்கு உதவிகளை வழங்க ஜப்பான் நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment