Pages

Saturday, December 14, 2013

ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தனது அதிகாரங்கள் எவை என்பதனை விளக்கினார்!

Saturday, December 14, 2013
இலங்கை::ஆளுநராகப் பதவியேற்று 4 வருடங்களின் பின்னர் தனக்குள்ள அதிகாரங்கள் தொடர்பில், வட மாகாண அரச அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண ஆளுநரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான ஜி.ஏ.சந்திரசிறி விளக்கமளித்துள்ளார்.

வட மாகாண சபை மக்களால் தெரிவு செய்யப்பட்டு, அதன் முதலாவது வரவு -செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஆளுநரால் அவசர அவசரமாக விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய, நேற்று (13.12.13) வடக்கு மாகாண சபை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார் வடக்கு ஆளுநர்.

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், மத்திய அரசுக்குட்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு அரச அதிபர்கள், வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைச் சட்டங்கள் ஊடாக ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பில் ஆளுநராகப் அதிகாரிகளுக்கு ஆளுநர் சந்திரசிறி விளக்கமளித்தார்.
 
ஆளுநர் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றாமல் ஒரு குழந்தையை அல்லது குண்டரைப் போன்று செயற்பட்டால் அவரை பதவி நீக்கம் செய்யவேண்டுமென வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
 
ஆளுநர் ஒருவரை பதவிநீக்குவதற்கான வழிமுறைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற வைபம் ஒன்றின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
ஆளுனர் ஒருவர் சட்டத்திற்கு எதிராக செயற்பட்டால் அவரை பதவி நீக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஆளுநர் ஒருவர் தனது பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரே பதவியை துறக்கின்றார் எனவும், ஆளுநரை மீண்டும் பதவியில் அமர்த்துவது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆளுநராகப் பதவியேற்று 4 வருடங்களின் பின்னர் தனக்குள்ள அதிகாரங்கள் தொடர்பில், வட மாகாண அரச அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண ஆளுநரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான ஜி.ஏ.சந்திரசிறி விளக்கமளித்துள்ளார்
 
 

No comments:

Post a Comment