Pages

Saturday, December 14, 2013

மன்னார் மாந்தை வீதியில் விபத்து: பேருந்தும் இராணுவ கப் ரக வாகனமும் மோதி இராணுவ சிப்பாய் மரணம்!

Saturday, December 14, 2013
இலங்கை::மன்னார் மாந்தை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெரிய மடுவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்து, தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து மாந்தை வீதியூடாக சென்று கொண்டிருந்த இராணுவ கெப் வாகனத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த கெப் வாகனத்தின் சாரதியான இராணுவ சிப்பாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாகனத்தில் இருந்த இரு இராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

 
 
 

 

No comments:

Post a Comment