Pages

Tuesday, December 17, 2013

வவுனியா வடக்கில் யானைகள் அட்டகாசம்!!

Tuesday, December 17, 2013
இலங்கை::வவுனியா வடக்கு பிரதேசத்திலுள்ள பல கிராமங்களிலும் யானைகளின் தொல்லை நாளாந்தம் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்னர்.
 
புளியங்குளம், பழையவாடி, ஊஞ்சல்கட்டி, மருதோடை, குளவிசுட்டான் உள்ளிட்ட பகுதிகள் உட்பட பல பகுதிகளிலும் இவ்வாறு யானைகள் மக்களின் குடிமனைகளுக்குள் வருவதுடன் தென்னை, வாழை உட்பட பல வகையான மரங்களையும் சேதப்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இதேவேளை, புளியங்குளம் பகுதியில்  சனிக்கழமை தனியார் வகுப்பொன்றுக்கு சென்று வீடு திரும்பிய மாணவியொருவரை யானை துரத்தியுள்ளது. எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பால் யானை துரத்தப்பட்டு மாணவி காப்பாற்றப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment