Pages

Tuesday, December 17, 2013

கலாபூசண விருது விழா; 296 சிங்கள, தமிழ், முஸ்லிம் கலைஞர்கள் பொற்கிழி வழங்கி கௌரவிப்பு!

Tuesday, December 17, 2013
இலங்கை::தேசிய பாரம்பரியங்களை பாதுகாக்கும் பல் துறைசார்ந்த கலைஞர்கள் வருடாந்தம் கலாசார மரபுரிமைகள் அமைச்சினூடாக கலைஞர்கள் கலாபூசண விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர். அதேபோன்று இவ்வருடமும் தமது திறமைகளை வெளிப்படுத்திய கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு  (15ஆம் திகதி) றோயல் கல்லூரி, நவரங்கஹல மண்டபத்தில் இடம்பெற்றது.
 
கலாசார அலுவல்கள் திணைக்களம், கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன ஒன்றினைந்து கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
 
மேற்படி நிகழ்வில் சிங்கள கலைஞர்கள் 201 பேரும், தமிழ் கலைஞர்கள் 70 பேரும் முஸ்லிம் கலைஞர்கள் 25 பேரும் நினைவுச் சின்னங்கள், பொற்கிளி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 
இவ்விழாவில் அமைச்சர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள், மதவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோரும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன் புரவலர் ஹாஸிம் உமர் ஆகியோர் இணைந்து 25 முஸ்லிம் கலைஞர்களுக்கும் விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.
 
இவ்விழாவில் தெமடகொட ஹைரியா முஸ்லிம் மகளீர் கல்லூரி மாணவிகளின் இஸ்லாமிய கலை நிகழ்வும் இடம்பெற்றது.

No comments:

Post a Comment