Pages

Tuesday, December 17, 2013

வட மாகாண எதிர்க்கட்சி தலைவர் கே.கமலேந்திரனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Tuesday, December 17, 2013
இலங்கை::வட மாகாண எதிர்க்கட்சி தலைவரும் EPDPயின் முக்கியஸ்த்தருமடான கே.கமலேந்திரனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கே.கமலேந்திரனை எதிர்வரும் 31ஆம் திகதி விளக்கமறியிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் கே.கமலேந்திரன், இன்று செவ்வாய்க்கிழமை (17.12.13) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியனின் கொலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கே.கமலேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த கொலை தொடர்பில் நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியனின் மனைவியும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

No comments:

Post a Comment